fbpx

நற்செய்தி.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.320 குறைந்தது..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 37,088-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 4,636-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 37,088-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.90 குறைந்து ரூ. 60.40-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.60,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

நடிகை சுஷ்மிதா சென் உடன் டேட்டிங் செய்யும் பிரபல தொழிலதிபர்.. திருமணம் குறித்து வெளியிட்ட தகவல்..

Fri Jul 15 , 2022
வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி, லலித் மோடி 2010 முதல் லண்டனில் இருந்து வருகிறார்.. இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் உடனான தனது உறவு நிலையை லலித் மோடி அறிவித்தார்.. அவரின் பதிவில் “மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களின் உலக சுற்றுப்பயணத்திற்குப் பிறகு லண்டனுக்குத் திரும்பி […]

You May Like