fbpx

நற்செய்தி.. தங்கம் விலை மீண்டும் குறைவு.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.36,960-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ.4,620-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.61.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,800-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகாத ’இரவின் நிழல்’..! இயக்குனர் பார்த்திபன் போட்ட பரபரப்பு ட்வீட்..!

Wed Sep 21 , 2022
‘இரவின் நிழல்’ திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படாத நிலையில், இதுதொடர்பாக இயக்குநர் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார். 40 வருடத்திற்கும் மேலாக, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிகரமாக இயங்கி வருபவர் பார்த்திபன். புதுமையை விரும்பக் கூடிய இவர், தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இவர் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படம் பலருக்கும் […]
ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகாத ’இரவின் நிழல்’..! இயக்குனர் பார்த்திபன் போட்ட பரபரப்பு ட்வீட்..!

You May Like