fbpx

குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.224 குறைந்த தங்கம் விலை….

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.38576-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அட்சய திருதியை..! தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு டன் தங்கம் விற்பனையா?

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4822-க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.38576-க்கு விற்பனையாகிறது… இதே பொல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 80 காசு குறைந்து ரூ.62.-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியார் இவர்கள்தான்..! திடீரென ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..!

Fri Aug 19 , 2022
தமிழ் சினிமாவில் பலருக்கும் பிடித்தமான , இன்னும் சொல்லப்போனால் பலருக்கு ரோல் மாடலாகவும் இருக்கக்கூடிய ஜோடி என்றால் அது சூர்யா – ஜோதிகா ஜோடிதான். கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படம் மூலம் முதன் முதலில் அறிமுகமான இந்த ஜோடி , அதன் பிறகு நட்பு, காதல் என வெவ்வேறு படிநிலைகளை அடைந்தது. ஆரம்பத்தில் ஜோதிகாவிடம் எது உங்களை கவர்ந்தது என கேட்டதற்கு, “அவர் தனது உதவியாளர்கள் […]

You May Like