fbpx

நற்செய்தி.. ஒரே நாளில் ரூ.320 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பெண்கள்..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கு விற்பனையாகிறது.

முன்னதாக நேற்று தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.. நேற்று ஒரே நாளில் ரூ.720 உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Maha

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு.. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. எப்படி விண்ணப்பிப்பது..?

Thu Apr 6 , 2023
எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு […]
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு..!! மாணவர்கள் ஷாக்..!! முழு விவரம் இதோ..!!

You May Like