fbpx

Good News | இனி அரசுப் பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமான நாட்களில் இருக்கும் கட்டணமே பண்டிகை காலங்களிலும் உள்ளது என்பதால் அந்த காலக்கட்டத்தில் அரசுப் பேருந்துகளில் அதிகம் பேர் பயணிக்கின்றனர். இதனால் அது போன்ற நேரங்களில் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்ய முடிவதில்லை.

இந்நிலையில், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் நாட்கள் 30இல் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை இதுவரையில் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் தான், பயணிகளின் வசதிக்காக 15.03.2024 முதல் 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இதன் மூலம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர் செல்வதற்கு மிகக் குறைந்த கட்டணத்தில் எளிதாக செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. கடைசி நேர நெருக்கடிகளைத் தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

Read More : TANGEDCO | மின் கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் அதிரடி குறைப்பு..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Chella

Next Post

Garlic | இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! ஒரே நாளில் அதிரடியாக ரூ.100 குறைந்த பூண்டின் விலை..!!

Sat Mar 16 , 2024
சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை கடந்த சில வாரங்களுகு முன் ரூ.500-க்கு விற்பனையானதால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்தது. விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.250-க்கு விற்பனையான நிலையில், இன்று […]

You May Like