மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் அகவிலைப்படி உயர்வு 38%ல் இருந்து அது 42 சதவீதமாக அதிகரிக்கும்.. தற்போது, 38% வீதத்தில், ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,840 அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 4% உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களுக்கு மாதம் ரூ.7,560 கிடைக்கும்.
ஊழியரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.18,000 எனில், புதிய அகவிலைப்படி மாதத்திற்கு (42%) ரூ. 7560 ஆக இருக்கும்.. ஆண்டுக்கு (7560×12) ரூ 90,720 கிடைக்கும்.. இதுவரை மாதத்திற்கான அகவிலைப்படி (38%) ரூ.6840 ஆக உள்ளது.. எனவே தற்போது, 7560- 6840 = மாதம் ரூ 720 அதிகரிக்கும்.. இதன் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8,640 ஆக இருக்கும்.. வெவ்வேறு அடிப்படை ஊதியத்துடன் மேற்கண்ட முறையில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை கணக்கிடலாம்..