fbpx

இளைஞர்களே செம குட் நியூஸ்..!! இலவச ஸ்மார்ட்போன், இன்டர்நெட்..!! முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஸ்மார்ட்போன் திட்டத்தின்கீழ், இலவச ஸ்மார்ட்போன்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு இலவச இன்டர்நெட் வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பிரதாப்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் அசோக் கெலாட் உரையாற்றினார். அப்போது, ராஜஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளில் 250 கல்லூரிகள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 130 பெண்கள் கல்லூரிகள் உள்பட 300 கல்லூரிகளை திறந்துள்ளேன்.

இதற்கு முன் ராஜஸ்தானில் சில மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால், எனது அமைச்சகத்தின் கீழ், ராஜஸ்தானில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் ராஜஸ்தானில் 3 அல்லது 4 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் பிகானேர் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மருத்துவ நிறுவனங்கள் அமைந்திருந்தன. ஆனால், இன்று ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன் திட்டத்தின்கீழ், நாங்கள் இலவசமாக ஸ்மார்ட்போன்களை வழங்குவோம். இந்த ஸ்மார்ட்போன்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இலவச இன்டர்நெட் வழங்கப்படும். இத்திட்டம் பரிசீலினையில் உள்ளது” என்று தெரிவித்தார். இதேபோல், சமீபத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட், வீடுகளுக்கு மாதந்தோறும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மனைவியுடன் தனிமையில் இருந்த நண்பன்..!! ஒரே ரூமில் துணியில்லாமல்..!! ஆத்திரத்தில் ரவுடி செய்த காரியம்..!!

Tue Jun 13 , 2023
மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் நண்பனை சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் பவுல்ராஜ் (23). ரவுடியான இவர் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி லோகேஷ் (26) என்பவருடன் பவுல்ராஜ் நண்பராக இருந்தார். இதனால் லோகேஷ் வீட்டிற்கு பவுல்ராஜ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது லோகேஷ் மனைவி சத்யாவுக்கும், பவுல்ராஜூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. […]

You May Like