fbpx

குட் நியூஸ்..!! ரூ.6,000 நிவாரணத் தொகைக்கு நீங்களும் விண்ணப்பித்துள்ளீர்களா..? எப்போது கிடைக்கும் தெரியுமா..?

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இந்த 4 மாவட்டங்களில் சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும், மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாகளிலும் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில், நிவாரணம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், வருமான வரி செலுத்துவோர், அரசு உயர் அதிகாரிகள், சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை ரேஷன் கடையில் கிடைக்கும் விண்ணப்பத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், 4 மாவட்டங்களை சேர்த்து மொத்தம் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இதற்காக தனிசெயலி ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இந்த செயலியில், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆதார், வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்களை பதிவு செய்ததும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த் துறையினர், வீடு வீடாக சென்று ஆய்வு செய்த பிறகு விண்ணப்பதாரர்களை அவர்களது வீடுகளுக்கு முன்பு நிறுத்தி புகைப்படத்தை எடுத்து பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகள் முடிந்த பின்னரே, யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது தெரியவரும்.

Chella

Next Post

இலாகா இல்லாத அமைச்சர் பதவியும் பறிபோகிறது..!! செந்தில் பாலாஜிக்கு வைத்த செக்..!! சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!

Fri Jan 5 , 2024
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்தாண்டு மே மாதம் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், அன்று இரவே அவர் கைது செய்யப்பட்டார். சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இருப்பினும், அன்றைய தினமே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பிரச்சனை இருந்த நிலையில், அவருக்கு […]

You May Like