fbpx

குட்நியூஸ்… தமிழகம் முழுவதும் மேலும் 433 பள்ளிகளில்…காலை உணவு திட்டம் இன்று முதல் அமல்…

தமிழகம் முழுவதும் மேலும் 433 பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமலுக்கு வந்தது.

அரசு பள்ளிகளில் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்படும் இத்திட்டம் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. முதல் கட்டமாக 1545 தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது..

மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது, ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது, ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவது, பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வருகையை உயர்த்தி தக்க வைப்பது, வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை இத்திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது..

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.. அதன்படி தமிழகம் முழுவதும் மேலும் 433 பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமலுக்கு வந்தது.. சென்னை உட்பட 38 நகரங்களில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் ரூ.1.06 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்..

Maha

Next Post

100 நாள் வேலைத் திட்டம்..!! யாருக்கெல்லாம் உரிமை..? தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு..!!

Wed Mar 1 , 2023
ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும். 18 […]

You May Like