fbpx

பெண்களே குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.240 குறைந்த தங்கம் விலை…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,080க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,510க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,080க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து, ரூ.75.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது… இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,700க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

நோயாளிகள் கவனத்திற்கு..!! புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tue Mar 28 , 2023
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, அன்று பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்பதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் […]

You May Like