மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம கடந்த மாதம் 1-ம் தேதி 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. அப்போது அவர், பெண்களுக்காக, மத்திய அரசின் மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தில் பெண்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம், கூடுதல் வரி விலக்கு பலனையும் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கலாம்.
மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில் ஆண்டுக்கு 7.5 சதவீத நிலையான வட்டி விகிதம் கிடைக்கும். இந்த புதிய திட்டம் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.. நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
இத்திட்டத்தை விளம்பரப்படுத்த பொதுத்துறை வங்கிகள் தனித்துவமான முயற்சிகளை பயன்படுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் ஒரு முறை முதலீடு செய்யும் சிறுசேமிப்புத் திட்டமாகும்.. இதன் மூலம் பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் இரண்டு வருட காலத்திற்கு ரூ.2 லட்சம் வரை டெபாசிட் வசதி கிடைக்கும்.
வட்டி விகிதம்: மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு, 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.. இத்திட்டம் 2 வருட காலத்திற்கு, பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் ரூ. 2 லட்சம் வரை டெபாசிட் விருப்பங்களை வழங்கும்.
தகுதி: மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழை ஒரு பெண் அல்லது பெண்ணின் பெயரில் மட்டுமே திறக்க முடியும்.
எப்படி விண்ணப்பிப்பது:
- மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்தின் படிவத்தைப் பெற, அருகிலுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் செல்லவும்.
- உங்கள் நிதி, தனிப்பட்ட தகவல்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
- அடையாளம் மற்றும் முகவரி சரிபார்ப்பு போன்ற தேவையான ஆவணங்களுடன் படிவத்தை அனுப்பவும்.
- டெபாசிட் தொகையை முடிவு செய்து, பணம் அல்லது காசோலையைப் பயன்படுத்தி டெபாசிட் செய்யுங்கள்.
- மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ததற்கான சான்றாக, சான்றிதழைப் பெறுங்கள்.
கணக்கீடு: இத்திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள். உதாரணமாக இத்திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், முதல் ஆண்டில் அடிப்படைத் தொகையில் ரூ. 15,000 2-வது ஆண்டில் ரூ.16,125 பணம் பெறலாம். இதன் விளைவாக, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் மொத்தமாக ரூ.2,31,125 பெறலாம்..