fbpx

குட் நியூஸ்..!! இனி ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு வரை செல்லும்..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கிருந்து தான் வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. அதன்படி, ஜனவரி 24ஆம் தேதி முதல் தென்மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு செல்லும் பெருவாரியான பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.

இந்த உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரணை நேற்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை நகரில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் வழித்தடங்களின் இரு வரைபடங்களை தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பு ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து “தனியார் பேருந்துகள் போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க முடியாது. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கிமீ தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் தனியாக திறந்துவிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு தனியார் பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்குவது குறித்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் பிறகு நேற்று வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவுப்படி, “கோயம்பேடு சுற்றியுள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றலாம். ஆன்லைன் மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர மற்ற இடங்களை குறிப்பிடக்கூடாது.

அதே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். கிளாம்பாக்கம் சென்ற பிறகே தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்” என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் இன்று காலை முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பெருங்களத்தூர், போரூர் வழியாக கோயம்பேடு வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’நான் லேகியம் தான் விற்கிறேன்’..!! ’பங்காளி கட்சிகளை ஒழிக்க இதுதான் வழி’..!! அண்ணாமலை ஆவேசம்..!!

Sat Feb 10 , 2024
பங்காளி கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக லேகியம் விற்றுக் கொண்டிருக்கின்றேன் என அண்ணாமலை கூறியுள்ளார். திருவள்ளூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை நேற்று மாலை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் இல்லாத சாதி அரசியல், குடும்ப அரசியல் இல்லாத, அடாவடித்தனம் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாஜக தனித்து நின்று கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து பங்காளி கட்சியைச் […]

You May Like