தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை 3 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, வீடு, கடைகளுக்கு மின்சாரம் கோரி விண்ணப்பித்தோருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கு டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவையில்லை என்றால், 3 நாட்களில் மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் 7 நாட்களுக்குள் இந்த வேலையை முடித்துவிட வேண்டும்.
அதேபோல், மேல்நிலை கேபிள்கள் உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். இதனால், அதிக கட்டணம் வசூலிப்பதை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இனி மேல்நிலை கேபிள்கள், நிலத்தடி கேபிள்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்று தெரிகிறது.
சென்னை மட்டுமின்றி அடுத்த சில வாரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மின்கட்டண முறையில் மாற்றம் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மின் கட்டண முறையில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : மக்கள் அச்சம்..! இன்று முதல் எப்போது வேண்டுமானாலும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஸ்டிரைக்…!