பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்திற்காக நாளை (ஜன.7) முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கனில் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அந்த தேதியில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் மற்றும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.