மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6,000 நிவாரணத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து செயலியில் அவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவரங்கள் சரிபார்ப்புக்கு பிறகு அவர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.6,000 வழங்கப்படும் என தெரிகிறது.