கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்..
மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் ( பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.. மேலும் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.. இந்த மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.. கல்லூரி பயிலும் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ மாணவிகள் நேரடியாக பதிவு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.. மேலும் இத்திட்டத்திற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டன.. அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.. இளநிலை, தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவோர் இந்த திட்டத்தில் பயனடையலாம்.. இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்..
இந்நிலையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி விழாவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் 15 Model Schools, 26 School of Excellence ஆகியவற்றை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்க உள்ளார்.