fbpx

மாணவர்களே குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு..?

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டிலும் ஜூன் 7ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், மாணவர்களின் நலனை கருதி வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை பள்ளிகள் திறப்பதற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கூடிய விரைவில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

Chella

Next Post

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைப்பு...!

Mon Jun 5 , 2023
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 1952 ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின் கீழ், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மணிப்பூர் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷு சேகர் தாஸ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு அலோகா பிரபாகர் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். மணிப்பூர் […]

You May Like