fbpx

குட் நியூஸ்..!! நாளை (டிச.27) இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை (புதன்கிழமை) ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு நாளை (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

காலையில் தூங்கி எழுந்தவுடனே மந்தமாக உள்ளதா..? தவறாமல் இதை ஃபாலோ பண்ணுங்க..!!

Tue Dec 26 , 2023
பரபரப்பான வாழ்க்கையில் சிலர் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். பலர் இரவும் பகலும் உழைக்கின்றனர். நேரத்திற்கு சாப்பிடவோ, தூங்கவோ நேரமில்லை. இந்த தொடர் வேலையால் உடல் சோர்வடைகிறது. உறக்கம், உணவு இல்லாமல் மணிக்கணக்கில் வேலை செய்தால் கடுமையான நோய்களுக்கு ஆளாக நேரிடும். மருத்துவரின் ஆலோசனையை சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றும் பலனில்லை. இன்றைய காலத்தில் இளைஞர்களும், பெண்களும் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். உடலில் இரும்புச்சத்து குறைபாடு சோர்வு […]

You May Like