fbpx

குட் நியூஸ்..!! இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து பண்டிகைகள், திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் கச்சபேஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நாளை (பிப்ரவரி 1) நடைபெற உள்ளது. இதனால், இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

”திமுக தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமர்”..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

Wed Jan 31 , 2024
திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று ராமநாதபுரம் – கடலூர் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சேலத்தில் இளைஞரணி மாநாடு வெற்றி மாநாடாக அமைந்தது. அதன் வெற்றி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ஏப்ரல் மாத இறுதியில் தேர்தலுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதில், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற […]

You May Like