தமிழகத்தில் உள்ள ரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) 2023- 2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயில இன்று (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 11ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இளநிலையில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை படித்தவர்களும், இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளுக்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை முடித்தவர்களும், இந்த பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ் சி, எஸ் டி பிரிவினர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட் படிப்பிற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். பட்டியல்/ பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ரூ. 250 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் 93634 62070, 93634 62007, 93634 62042 மற்றும் 93634 62024 மின்னஞ்சல் தொடர்புக்கு tngasa2023@gmail.com ஆகும்.