Health Insurance: மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் இனி அனைத்து வயதினரும் காப்பீடு பெற இயலும் என்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கியுள்ளது.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களுக்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. அதற்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2024ம் ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் ஐஆர்டிஏஐ பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, அனைத்து வயதினருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வழங்குவதை உறுதி செய்ய முடிவு செய்துள்ளது. மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், மகப்பேறு மற்றும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பாதுகாப்பை வழங்கும் சூழலை உருவாக்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் போன்ற குறிப்பிட்ட மக்கள்தொகைக்கு ஏற்ற பாலிசிகளை அறிமுகப்படுத்தவும், அவர்களின் தேவைக்கு ஏற்ப பாலிசிகளை வடிவமைக்கவும் தனிவழிமுறைகளை ஏற்படுத்த ஐஆர்டிஏஐ அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு மேலும் சில அறிவுறுத்தல்களை ஐஆர்டிஏஐ வழங்கி உள்ளது. அதாவது புற்றுநோய், இதயம், சிறுநீரகச் செயலிழப்பு, எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய் உள்ளவர்களுக்கு தனிநபர் பாலிசிகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கான காத்திருப்பு காலம் 48 மாதங்களில் இருந்து 36 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளன. பாலிசி எடுக்கும் போது பாலிசிதாரர்கள் ஏற்கனவே உள்ள உடலையை தெரியப்படுத்தினாரா, இல்லையா என்பதை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளாமல், ஏற்கனவே உள்ள நோய்களுக்கு 36 மாதங்களுக்கு பிறகு க்ளைமை நிராகரிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: இந்திய பெண்களுக்கு குட் நியூஸ்.!! AI தொழில்நுட்பத்தின் மூலம் மார்பக புற்றுநோய் கண்டறியும் வசதி.!!