fbpx

ட்விட்டரை தொடர்ந்து கூகுள் அதிரடி!… நீண்ட காலமாக செயலில் இல்லாத கணக்குகள் நீக்கம்!

பாதுகாப்பு காரணங்களுக்காக செயலில் இல்லாத கணக்குகளை கூகுள் நீக்க உள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவராலும் கூகுளின் ஜிமெயில் (Gmail), யூடியூப் (Youtube), டிரைவ் (Drive) போன்ற பயன்பாடுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்நுழைவதற்கு கூகுள் கணக்குத் தேவைப்படும். இதனால் ஒவ்வொரு தனி நபரும் தனக்கென ஒரு கணக்கை உருவாக்கி கூகுளின் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி அதில் சில கணக்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால், செயல்படாமல் இருக்கும் கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை டிசம்பர் முதல் நீக்கவுள்ளது. இந்த முடிவு தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் பள்ளிகள் அல்லது வணிகங்கள் போன்ற நிறுவனங்களின் கணக்குகளைப் பாதிக்காது. மேலும், கணக்குகள் நீக்கப்படுவதற்கு முன்னர் பயனர்களுக்கு கூகுளிலிருந்து பல அறிவிப்புகள் அனுப்பப்படும். இதனை பொருட்படுத்தாமல் இருக்கும் பயன்படுத்தப்படாத கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Kokila

Next Post

அவரை பார்த்துதான் கற்றுக்கொண்டேன்!... தல தோனி குறித்து கே.எல்.ராகுல் ஓபன் டாக்!

Thu May 18 , 2023
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் கீழ் விளையாடி அனுபவத்தை நிகழ்ச்சி ஒன்றில் கே.எல்.ராகுல். பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் மற்றும் அவரது பேட்டிங் மற்றும் அமைதியான இயல்புக்கு பெயர் பெற்றவர். இந்தியன் பிரீமியர் லீக்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த யை கேஎல் ராகுல், போட்டியில் விளையாடும் […]
ரன் எடுக்க திணறும் கே.எல். ராகுல்..!! இதற்கு ஒரு முடிவே கிடையாதா..? கோபத்தில் ரசிகர்கள்..!!

You May Like