fbpx

கூகுளில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை..!! மொத்தமும் டெலிட் ஆகப்போகுது..!! உடனே பேக்கப் எடுங்க..!!

கூகுள் அக்கவுண்ட் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கூகுள் அக்கவுண்ட் இல்லையென்றால், இமெயில் முதல் மேப் வரையில் எந்த ஆப்களையும் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் தான், கூகுள் அக்கவுண்ட்டில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. சொல்லப்போனால், அந்த தேதிக்குள் இதை செய்யாவிட்டால் உங்களது ஹிஸ்டரி நீக்கம் செய்யப்பட்டலாம். இந்த விதிகள் யாருக்கு பொருந்தும்? நீக்கம் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

டிசம்பரில் வரக்கூடிய புதிய நடைமுறைகள், கூகுள் மேப் யூசர்களுக்கே வருகிறது. இந்த விதிகள் மூலம் கூகுள் மேப்ஸ் லோகேஷன் ஹிஸ்டரி-ஐ ஆட்டோமேட்டிக் முறையில் நீக்கம் செய்ய இருக்கிறது. அதாவது, 3 மாதங்களுக்கு மேலான லோகேஷன் ஹிஸ்டரி உங்களது அனுமதி இல்லாமலேயே நீக்கப்படும். ஆகவே, இனிமேல் உங்களது மேப்பில் 3 மாத ஹிஸ்டரியில் கவனமுடம் இருக்க வேண்டும். இதை பேக்கப் எடுக்கலாம். இல்லையென்றால், உங்களது டைம்லைன், ரூட்கள் மற்றும் சென்ற இடங்களின் டேட்டாக்கள் திரும்ப கிடைக்காது.

இருப்பினும், செட்டிங்ஸ் மூலம் குறிப்பிட்ட டைம்லைனை அவ்வப்போது சேமித்து கொள்ளலாம். சேமிக்கப்பட்ட டைம்லைன் அப்படியே இருக்கும். சேமிக்கப்படாத லோகோஷன் ஹிஸ்டரி நீக்கம் செய்யப்படும். ஆகவே, அதற்கு முன்னதாகவே பேக்கப் எடுத்து கொள்ளலாம். உங்களது கூகுள் மேப்ஸ் லோகோஷன் ஹிஸ்டரி டேட்டாவை சேமிக்க முதலில் ஆப்-ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள். பிறகு கூகுள் மேப்ஸ் லோகோஷன் ஹிஸ்டரி நீக்கம் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். 3 மாத லோகோஷன் ஹிஸ்டரியை சேமிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

எப்படி சேமித்து கொள்வது..?

முதலில் கூகுள் ஆக்டிவிட்டி பக்கத்தை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அதில், வெப் மற்றும் ஆப் ஆக்டிவிட்டி டேப்-ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும். இப்போது, கூகுள் மேப், பிளே ஸ்டோர் போன்ற ஆப்களின் லோகோவுக்கு அருகில் வியூ ஆல் டேப் தோன்றும். அதை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

இப்போது, சேவிங் ஆக்விட்டி டேப் மற்றும் ஆட்டோ-டெலிட் டேப் தோன்றும். இதில் சேவிங் ஆக்டிவிட்டியை கிளிக் செய்து உங்களது விவரங்களை சேமித்துக் கொள்ளலாம். இதில் மேப் மட்டுமின்றி, மற்ற ஆப்களின் டேட்டாவும் சேமிக்க கிடைக்கும். கூகுள் யூசர்களுக்கு மெயில் மூலம் மட்டுமே அலெர்ட் செய்துள்ளது. வரும் நாட்களில் முழு விவரம் தெரியவரும்.

Read More : ரூ.400 கோடி ஊழல்..!! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைத்த அதிமுக..!! லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார்..!!

English Summary

The new rules will come into effect on Google Accounts from December 8.

Chella

Next Post

மைனர் மனைவியுடன் உடலுறவு கொள்வது பலாத்காரம்..!! - பம்பாய் உயர் நீதிமன்றம்

Fri Nov 15 , 2024
Consensual sex with minor wife is rape: High Court upholds 10-year jail for man

You May Like