உலகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள பல கோடி ஜி-மெயில் அக்கவுண்ட்டுகளை செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது : ஒவ்வொரு ஆண்டும் ஜி-மெயிலில் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பலரும் தங்களின் ஜி-மெயில் முகவரியை பயன்படுத்துவது இல்லை. அதேபோல் இறந்தவர்களின் ஜி-மெயில் முகவரியும் அப்படியே இருக்கும். இது ஜி-மெயில் சேவையை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் சர்வரில் அதிக இடத்தை பிடித்துள்ளது.
இந்த பிரச்சனையை தீர்க்க பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் முகவரிகள் டெலிட் செய்யப்பட உள்ளது. செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு உலகம் முழுவதும் பலகோடி ஜி-மெயில் அக்கவுண்ட்டுகள் டெலிட் செய்யப்பட உள்ளன. அதாவது கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பணி என்பது வரும் செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு தொடங்க உள்ளது. மேலும் குறிப்பிட்ட இ-மெயில் முகவரி நீக்கப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் மீண்டும் கிடைக்காது.
இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாம் நமது ஜி-மெயில் அக்கவுண்ட்டை ஆக்டிவ்வாக வைத்திருக்க வேண்டும். அதாவது கடந்த 2 ஆண்டுகளாக நாம் ஜி-மெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட இப்போது உடனே அதனை பயன்படுத்தி வந்துள்ள மெயிலை படித்தால் போதும். இல்லாவிட்டால் அந்த ஜி-மெயில் அக்கவுண்ட்டில் இருந்து இன்னொரு ஜி-மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பினால் போதும். இப்படி செய்யும்பட்சத்தில் நமது ஜி-மெயில் கணக்கு டெலிட் செய்யப்படாமல் தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.