கூகிள் AI ஷாப்பிங் கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆண்களும் பெண்களும் ஆடைகளை விர்சுவலாக அணிந்து பார்க்கலாம். இந்த வசதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங்கிற்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, வாங்குவதற்கு முன் ஆடைகளை அணிந்து பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
ஒரு ஆடையைத் தேர்ந்தெடுத்து, உங்களைப் போன்ற ஒரு மாடலைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஆடை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம். மடிப்புகள், சுருக்கங்கள் மற்றும் பிற விவரங்கள் உட்பட, அணியும் போது எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துக்கொள்ளலாம். வாங்க வேண்டும் என்று விரும்பினால், விற்பனையாளரின் தளத்திற்குச் சென்று வாங்கலாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையை இது நிவர்த்தி செய்கிறது.
ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தின் டிஃப்யூஷன் திறனை பயன்படுத்தி இந்த கருவி செயல்படுகிறது என்று கூகுள் கூறுகிறது. மாடல்களில் ஆடைகள், ரவிக்கைகள் மற்றும் பிற டாப்களின் உயர்தர படங்களை உருவாக்க இந்த டிஃப்யூஷன் தொழில்நுட்பம் உதவுகிறது. கூகுள் இதுபோன்ற விர்சுவல் கருவிகளைக் கொண்டுவருவது புதிதல்ல. இதற்கான முயற்சி கடந்த ஆண்டே தொடங்கப்பட்டது. இப்போது ஆடைகளை அணிந்து பார்க்கும் அனுபவத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் செய்பவர்கள் இந்த வழியில் ஆடைகளை விர்சுவலாக அணிந்து பார்ப்பதன் மூலம் கணிசமான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என கூகுள் தெரிவிக்கிறது.
Read more ; தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்..!! எப்போது தெரியுமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!