அமெரிக்காவில் ஜூன் 4ம் தேதி முதல் Google Pay செயலியின் சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் கூகுள் வாலட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயலியை விட வாலட் பயன்பாடு அதிகம் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் Google Pay செயலியின் சேவையை ஜூன் 4-ம் முதல் அமெரிக்காவில் நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்காவில் உள்ள google pay பயனாளர்கள் இந்த சேவையை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Google Wallet சேவை பயன்பாட்டில் இருக்கும். GPay உடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் ஐந்து மடங்கு அதிகமான பயனர்களைக் கொண்டதாகக் கூறப்படும் கூகுள் வாலட்டின் எழுச்சியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. Google Pay சேவை இந்தியா உள்ளிட்ட மற்ற உலக நாடுகளில் வழக்கம் போல தொடரும்.
எப்படி பயன்படுத்துவது..?
கூகுள் பே கணக்கினை தொடங்க வங்கிக் கணக்கு அவசியம். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். இன்டர்நெட் கனெக்சனும் இருக்க வேண்டும். எனினும் இதற்கு மற்ற கேஓய்சி ஆவணங்கள் எதுவும் இல்லை. முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் பே செயலியினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்த பிறகு, உங்களது வங்கிக் கணக்குடன் அப்டேட் செய்யப்பட்ட மொபைல் எண் பதிவு செய்து கொள்கை கணக்குடன் இணைத்தால் நீங்கள் பண பரிமாற்றம் செய்யலாம்.
English Summary : Google Pay has been discontinued in India