fbpx

வைரஸ் நோய்களை கட்டுப்படுத்தும் நெல்லிக்காய்!… ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் டீ போடுவது எப்படி!… நேச்சுரல் டிப்ஸ் உங்களுக்காக!

உடல், சருமம் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பெரிதும் பயன்படுகிறது. ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் டீ போடுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கும், எடை குறைப்பிற்கும் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளது. நெல்லிக்காய் கசப்பாக இருந்தாலும், இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், முடி பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும். இருப்பினும் நெல்லிக்காயில் டீ போட்டு குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்தப்படுகிறது.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது. இதேபோல், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. \

நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நெல்லிக்காயில் காணப்படுகின்றன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துகள் இரத்த ஓட்டத்தில் மெதுவாக குளுக்கோஸை வெளியிட வேலை செய்கின்றன. மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். இது தவிர, நெல்லிக்காயில் இருந்து குரோமியம் என்ற தாது கிடைக்கிறது, இது குளுக்கோஸ் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் நெல்லிக்காய் டீ குடிக்க வேண்டும் இந்த நிலையில் நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், நெல்லிக்காய் டீ உங்களுக்கு ஒரு சஞ்சீவியாகும்.

நெல்லிக்காய் டீ தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இப்போது அதில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் நசுக்கிய இஞ்சியை கலக்கவும். இப்போது புதினா இலைகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு தேநீரை வடிகட்டி ஒரு கோப்பையில் பரிமாறவும். இந்த டீயை நீங்கள் ஒரு நாளைக்கு 2 முறை குடிக்கலாம். இதேபோல், நெல்லிக்காயை விதை நீக்கி, நன்கு தட்டிக் கொள்ள வேண்டும். பின் மிளகைப் பொடிக்கவும். அடுத்து இரண்டு டம்ளர் நீரில் இவற்றுடன் மஞ்சளைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.ஒரு டம்ளராக வற்றியதும், எலுமிச்சைச்சாறு சேர்த்து, விருப்பப்பட்டால் தேன் சேர்த்துப் பருகினால் உடலுக்கு நன்மை பயக்கும்.

Kokila

Next Post

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் டிகிரி படித்தவர்களுக்கு 59 காலியிடங்கள்!

Fri Feb 24 , 2023
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கிராம் தக் சேவாக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 59 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்தியா போஸ்ட் பேங்க் வங்கிக்கு மின்னஞ்சல் மூலமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி கிராம் தக் […]

You May Like