fbpx

அமெரிக்காவில் குடிபெயர கோத்தபய ராஜபக்சே திட்டம்..? கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பு..?

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதை அடுத்து, கோபமடைந்த இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ உதவியுடன் தப்பி அண்டை நாடான மாலத்தீவுக்கு சென்றதாகவும், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் குடிபெயர கோத்தபய ராஜபக்சே திட்டம்..? கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பு..?

சிங்கப்பூரில் சில வாரங்கள் தங்கிய கோத்தபய ராஜபக்சே, பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர் இலங்கையை விட்டு தப்பியோடிய பிறகு மக்களின் முன்பு தோன்றவும் இல்லை, எந்த கருத்தையும் அவர் கூறவில்லை. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அடுத்த வாரம் இலங்கைக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இலங்கை ஊடகங்களில், கோத்தபய ராஜபக்சேவின் மனைவி ஐயோமா ராஜபக்சே அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால் கோத்தபய ராஜபக்சேவிற்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறைகளை கடந்த மாதம் தொடங்கிவிட்டதாக அவரின் அமெரிக்க வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chella

Next Post

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.. முக்கிய ஆவணங்கள் மாயம்.. நீதிபதி அதிர்ச்சி..

Fri Aug 19 , 2022
பெண் எஸ்.பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.. பெண் எஸ்பி ஒருவரிடம் சிறப்பு டிஜிபி பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக எழுந்த புகார் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது… இதையடுத்து சம்மந்தப்பட்ட டிஜிபி, மற்றும் அவருக்கு உதவிய எஸ். பி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சர்ச்சை பூதாகரமான நிலையில், வழக்குப்பதிவு, சிபிசிஐடி விசாரணை, நீதிமன்ற விசாரணை […]

You May Like