fbpx

ஒரு ஆசிரியர் இப்படி நடந்து கொள்வதா? … அரசுப் பள்ளி ஆசிரியர் கைது….

கன்னியாகுமரி அருகே இரணியல் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 1500 மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.அந்த பள்ளியில் கிறிஸ்துதாஸ் என்ற ஆசிரியர் கணக்குப் பதிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவர் வகுப்பறையில் ஆபாசமாக பாடம் எடுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் , இது குறித்து சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றார்கள் மற்றும் உறவினர்கள். பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடக்கும் படி போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள் என்பவர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் , ஆசிரியர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நேற்று மாணவர்கள் , பெற்றோர்ள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குளச்சல் மகளிர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் இவ்வாறு நடந்து கொண்டது. அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

Next Post

மேல்நிலைப் பள்ளி மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

Thu Sep 15 , 2022
மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தையே பின்பற்ற […]

You May Like