fbpx

H.Raja | ‘தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம்’..!! பிரதமர் முன்பு பரபரப்பை கிளப்பிய ஹெச்.ராஜா..!!

தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஹெச்.ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “பொய்யை சொல்லி தமிழக மக்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருகிறது. காங்கிரஸ் தான் ஜனநாயகத்துக்கு ஆபத்து. ஜனநாயகத்தை கொன்றவர்கள் அவர்களே. 1974ஆம் ஆண்டு இந்த ஜனநாயக கொலையை காங்கிரஸ் செய்தது.

இந்தியா கூட்டணி என்பது குடும்ப கூட்டணி. ஒரே குடும்பங்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் கூட்டணி” என கடுமையாக விமர்சித்தார். தொடந்து பேசிய அவர், “உதயநிதி, இன்பநிதி என ஸ்டாலின் குடும்பத்துக்கு திமுக மூத்த அமைச்சர்கள் சேவை செய்து வருகின்றனர். மூத்த அமைச்சர்கள் கேஎன் நேரு, துரைமுருகன் உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கு கூச்சமே இல்லை. 2024 தேர்தலில் மோடிக்கு எதிராக களத்தில் யாரும் இல்லை. விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்றார்.

English Summary : Government change in Tamil Nadu soon

Read More : Annamalai | ’பிரதமர் இல்லையென்றால் ஜல்லிக்கட்டு கிடையாது’..!! அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!!

Chella

Next Post

ICU-வில் சிகிச்சை பெறும் இளம்பெண்..!! மயக்க ஊசி செலுத்தி பலாத்காரம் செய்த ஊழியர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Wed Feb 28 , 2024
நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண்ணை அதிகாலையில் யாரும் இல்லாத போதும் மயக்க ஊசி செலுத்தி மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்நிலையில், இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு […]

You May Like