fbpx

“அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள்”..!! “போதும்டா சாமி என்று ஓடி வந்துட்டேன்”..!! திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு..!!

தஞ்சையில் அதிமுகவின் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல் சீனிவாசனும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ”அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள், அவர்கள் குடும்பத்தினரின் 80 லட்சம் வாக்குகளால் தான் நாம் தோற்றோம் என பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ”கூட்டணி கட்சிகள் ரூ.100 கோடி ரூபாய் கேட்கிறார்கள் என்று தான் பேசியது உண்மைதான். எடப்பாடி பழனிசாமி எங்களை கூப்பிட்டு பேசிவிட்டா, போகும் கூட்டங்களில் கூட்டணி குறித்து எதுவும் பேசி குழப்பிட வேண்டாம். மற்ற விஷயங்களை மட்டும் பேசுங்கள். அமைதியாக இருங்கள். மீதியெல்லாம் நாங்கள் பேசிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், போன தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். ஒரு தபால் ஓட்டு கூட எனக்கு விழவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர் எல்லாம் கொலைகார பாவிகள். சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றிபெற்றதே போதும்டா சாமி என்று ஓடி வந்துட்டேன்” என்று பேசியுள்ளார்.

Read More : மணிப்பூருக்கு மேலும் 10,000 ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கும் மத்திய அரசு..!! இதுவரை 258 பேர் உயிரிழப்பு..!!

English Summary

Government employees and teachers are murderous sinners.

Chella

Next Post

வாகன நம்பர் பிளேட்டில் ஏன் வெவ்வேறு நிறங்கள் உள்ளன? அதுக்கு பின்னாடி இவ்வளவு அர்த்தம் இருக்கா..?

Sat Nov 23 , 2024
Do you know about the different types of car number plates in India?

You May Like