fbpx

அட இது தெரியாம போச்சே…! ஜெனரிக் மருந்து கடைகள் திறக்கும் நபர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி…!

அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரதமர் மலிவு விலை மருந்துகள் திட்டம் நவம்பர், 2008-ல், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறையால் தொடங்கப்பட்டது.

3,000 மருந்தகங்களைத் திறக்க வேண்டும் என்ற இலக்கு 2017 டிசம்பரில் எட்டப்பட்டன. மேலும், மார்ச், 2020ல் மொத்தம் 6,000 விற்பனை நிலையங்கள் என்ற மாற்றி அமைக்கப்பட்ட இலக்கும் எட்டப்பட்டது. கடந்த நிதியாண்டில் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 8,610 ஆக இருந்தது. இப்போது 9,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மார்ச் 2024க்குள் 10,000 ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தற்போது 1,759 மருந்துகள் மற்றும் 280 அறுவை சிகிச்சை சாதனங்கள் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் நிலையான மற்றும் சீரான வருமானத்துடன் கூடிய சுயதொழில் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் மருந்துகளின் விலை பிராண்டட் மருந்துகளை விட 50 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை குறைவாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஊக்கத் தொகையாக ரூ. 5 லட்சம் நிதியுதவியாகவும், ஒருமுறை கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ. 2 லட்சமும் (வருமான வரி மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்களுக்கான திருப்பிச் செலுத்த வேண்டியது) நிதி ஆயோக் அமைப்பால் குறிப்பிடப்பட வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களிலும் மருந்தகம் திறக்கப்படுவதற்கும், பெண் தொழில்முனைவோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் திறப்பதற்கும் உதவிகரமாக இருக்கும்.

Vignesh

Next Post

IDFC வங்கியில் வேலைவாய்ப்பு…! மாதம் 30,500 ரூபாய் ஊதியம்… டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Sun Jan 1 , 2023
IDFC First Bank காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Senior Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் இருக்க வேண்டும். […]
அரசுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

You May Like