fbpx

4 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்களுக்கு அரசு விடுதி…! விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி தான் கடைசி நாள்…!

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மாணவ, மாணவியர்களுக்கென 17 விடுதிகள்‌ செயல்படுகின்றன. பள்ளி விடுதிகள்‌ 12 விடுதிகள்‌ மாணவர்கள்‌ விடுதியும்‌, 5 மாணவியர்கள்‌ விடுதியும்‌ செயல்படுகின்றன. இதில்‌ பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக்‌ மற்றும்‌ பொறியியல்‌ கல்லூரி விடுதிகள்‌ உள்ளன.

பள்ளி விடுதிகளில்‌ 4 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவ, மாணனவியர்களும்‌,அதற்குமேல்‌ படிக்கும்‌ மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி, பாலிடெக்னிக்‌ மற்றும்‌ பொறியியல்‌ விடுதிகளில்‌ சேர தகுதியுடையவர்கள்‌ ஆவர்‌. அனைத்து வகுப்பைச்‌ சார்ந்த மாணவ மாணவிகளும்‌குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில்‌ சேர்த்து கொள்ளப்படுகின்றனர்‌. விடுதிகளில்‌ எவ்வித ‘செலவினமும்‌ இல்லாமல்‌ சலுகைகள்‌ இலவசமாக வழங்கப்படுகின்றன.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும்‌ உணவும்‌, தங்கும்‌ வசதியும்‌ அளிக்கப்படும்‌. 10- ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ மாணனவியர்களுக்கு சீருடைகள்‌ வழங்கப்படும்‌. 10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ /மாவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள்‌ வழங்கப்படும்‌. விடுதிகளில்‌ சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர்‌. பாதுகாவலரது ஆண்டு வருமானம்‌ ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌. இருப்பிடத்திலிருந்து பயிலும்‌ கல்விநிலையத்தின்‌ தொலைவு குறைந்தபட்சம்‌ 8 கீ.மீ.க்கு மேல்‌ இருக்க வேண்டும்‌. இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள்‌ விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள்‌, காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர்‌ வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

SBI வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை...! 3-ம் தேதி முதல் பெறலாம் என அறிவிப்பு...!

Sun Jul 2 , 2023
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தின்படி தனிநபரோ அல்லது கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுத்தேர்தலில் அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் பெற்ற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தகுதி பெற்றவையாகும். இவ்வாறு பெற்ற தேர்தல் பத்திரங்களை தகுதியுள்ள அரசியல் கட்சி அதிகாரமளிக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே பணமாக்க முடியும். […]
சலுகைகளை வாரி வழங்கும் SBI வங்கி..!! உடனே இதை பண்ணுங்க..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

You May Like