ஆயுஷ் மருத்துவ முறைகள் மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆயுஷ் முறைகள், சிகிச்சை பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஒரு சிறப்பு விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11-வது பிரிவுக்குப் பிறகு 11 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுஷ் முறைகள் / இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறும் வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் (ஏஒய்) விசாவை உருவாக்குவது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இது இந்தியாவில் மருத்துவ மதிப்பு பயணத்தை அதிகரிக்கும்.
இந்த முன்முயற்சி, இந்திய பாரம்பரிய மருத்துவத்தை உலகளாவிய நிகழ்வாக மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான முயற்சியை வலுப்படுத்தும். சிறப்பு ஆயுஷ் விசா பிரிவை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.