fbpx

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! அடுத்த 6 மாதத்தில் நாடு முழுவதும் வரப்போகும் அதிரடி மாற்றம்…!

தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர அரசு செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றார். இந்த புதிய தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் வகையில் தானியங்கி நம்பர் பிளேட் ரெகக்னிஷன் சிஸ்டத்தின் (Automatic number plate reader cameras) ஒரு முன்னோடித் திட்டத்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

இளைஞர்களே கவனம்...! இன்று நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க...!

Sun Mar 26 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ இன்று நடைபெறவுள்ளது. சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு, மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய […]

You May Like