fbpx

அட்டகாசமான அறிவிப்பு… நிலம் வாங்க இருக்கும் நபர்களுக்கு 50% மானியம் வழங்கப்படும்…! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை…!

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்கள் நிலம் வாங்க மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் 2022-2023-ம் ஆண்டிற்கான அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் வரை மானியம் வழங்க 10 கோடி ரூபாய் மாநில அரசு நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை...! வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை...!

Sun Sep 18 , 2022
தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது […]

You May Like