fbpx

’இனி மதுபானங்களை ஒழித்துவிட்டு, கஞ்சாவை அரசு ஊக்குவிக்க வேண்டும்’..! பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு..!

மதுபானங்களை ஒழித்துவிட்டு கஞ்சா, பாங்கு பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, ”காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வன்முறை போன்ற குற்றங்கள் பெருகி வருகின்றன. பொதுமக்கள் மதுபானங்களை குடிப்பதே இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதற்குக் காரணம். மதுபானங்கள் குற்றங்களை செய்ய மனிதர்களைத் தூண்டுகிறது. அதே சமயம் கஞ்சா, பாங்கு போன்றவற்றைப் புகைக்கும் போது இத்தகைய எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை. பாங்கை உட்கொள்பவர் பாலியல் பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை எப்போதாவது செய்திருக்கிறார்களா?

’இனி மதுபானங்களை ஒழித்துவிட்டு, கஞ்சாவை அரசு ஊக்குவிக்க வேண்டும்’..! பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு..!

எனவே, சத்தீஸ்கரில் மதுபானங்களை ஒழித்துவிட்டு கஞ்சா, பாங்கு பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். போதை தேவைப்படும் நபர்களுக்குக் கஞ்சாவை அரசு விநியோகம் செய்ய வேண்டும். மது ஒழிப்பு நடவடிக்கைக்காக மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கஞ்சாவை விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும்” என கூறினார். பாஜக எம்எல்ஏவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பேசும்பொருளாக மாறியுள்ளது. ஆளும்கட்சி உள்பட அண்டை மாநில தலைவர்களும் பாஜக எம்எல்ஏ பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

’இனி மதுபானங்களை ஒழித்துவிட்டு, கஞ்சாவை அரசு ஊக்குவிக்க வேண்டும்’..! பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு..!

இதற்கு கண்டனம் தெரிவித்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ”இந்தியாவில் கஞ்சா பயன்படுத்த தடை இருக்கும் போது, ஒரு மக்கள் பிரதிநிதி கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி கொடுக்க வேண்டும் எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்? இந்தியாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டுமெனில் மத்திய பாஜக அரசுக்கு அவர் கோரிக்கை விடுக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பெற்றோர்களை மிரட்டும் தனியார் பள்ளிகளின் அராஜகம்.. நடவடிக்கை எடுக்குமா பள்ளி கல்வித்துறை..!

Tue Jul 26 , 2022
சென்னை மற்றும் கோவை தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளில் பெற்றோரிடம், பொறுப்பு துறப்பு படிவத்தில் பள்ளி நிர்வாகம், பெற்றோர் கையெழுத்திட வேண்டும் என வற்புறுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் இதே போல பெற்றோரை கையெழுத்து கேட்டு வற்புறுத்ததாகவும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் […]

You May Like