கழிவுநீர் அகற்றும் பணியின்போது உயிரிழந்தால் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கழிவுநீர் அகற்றும் பணியின்போது நிரந்தர ஊனமுற்றோருக்கு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கையால் கழிவுநீர் அகற்றும் பணியினை முற்றிலும் ஒழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.
மேலும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிற வகையான குறைபாடுகள் ஏற்பட்டால், 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினார். இதுபோன்ற துயர சம்பவங்களைத் தடுக்க அரசு அமைப்புகள் முனைப்புடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், கழிவுநீர் உயிரிழப்புகள் தொடர்பான வழக்குகளைக் கண்காணிக்க உயர் நீதிமன்றங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜூலை 2022 இல் மக்களவையில் மத்திய அரசு மேற்கோள் காட்டிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர்.