கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் அதே வேளையில், வட்டி இல்லாமல் கடன் வழங்கும் ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? இது உண்மை தான். இருப்பினும், இந்த அரசாங்கத் திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது, இந்தத் திட்டம் பெண்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் வரையிலான கடன் வட்டி இல்லாமல் அங்கீகரிக்கப்படுகிறது. இதன் பொருள், இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உடைய பெண்ணுக்கு, ரூ.5 லட்சம் வரையிலான கடன் வழங்கப்படும். அவர் ஒரு ரூபாய் கூட வட்டி செலுத்த வேண்டியதில்லை. அரசாங்கத்தின் இந்த சிறப்புத் திட்டம் லக்பதி தீதி யோஜனா.
அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தின் பல நன்மைகள் உள்ளன. பெண்களுக்கு நிதி வலிமை அளிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அரசின் லக்பதி தீதி யோஜனா என்பது ஒரு திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டமாகும்.
இந்தத் திட்டம் திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் பெண்களை சுயதொழில் செய்யத் தகுதியுடையவர்களாக ஆக்குகிறது. லக்பதி தீதி திட்டத்தின் கீழ், சுயஉதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படும் தொழில்முறை பயிற்சியாளர்களால் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ரூ.1-5 லட்சம் வரை வட்டியில்லா கடன்
ஆகஸ்ட் 15, 2023 அன்று மத்திய அரசின் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 1 கோடி பெண்களை லட்சபதி தீதி ஆக்குவதில் வெற்றி பெற்றுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. இதற்கு முன்னர் இதன் இலக்கு 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் அதன் பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, இடைக்கால பட்ஜெட்டில் இது 3 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. பெண்களை வலுப்படுத்தும் இந்த முயற்சியில், திறன் பயிற்சியுடன், பெண்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பெரிய நிதி உதவியும் வழங்கப்படுகிறது. லட்சபதி தீதி யோஜனாவின் கீழ், பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.1 முதல் 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
லட்சபதி தீதி யோஜனாவின் நன்மைகள் என்ன?
லட்சபதி தீதி யோஜனாவில், தொழில் தொடங்க உங்களுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்குவது முதல் சந்தையை அடைவது வரை, உதவி வழங்கப்படுகிறது. லட்சபதி தீதி யோஜனாவின் கீழ் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. குறைந்த செலவில் காப்பீட்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் சம்பாதிப்பதோடு சேமிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
வட்டியில்லா கடனை எவ்வாறு பெறுவது?
18 முதல் 50 வயதுக்குட்பட்ட எந்தவொரு பெண்ணும் அரசாங்கத்தின் லக்பதி தீதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, அந்தப் பெண் மாநிலத்தைச் சேர்ந்தவராகவும், சுய உதவிக் குழுவில் சேரவும் கட்டாயமாகும்.
தொழில் தொடங்க கடன் பெற, தேவையான ஆவணங்கள் மற்றும் வணிகத் திட்டத்தை உங்கள் பிராந்திய சுய உதவிக் குழு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, விண்ணப்பம் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும், பின்னர் கடனுக்காக உங்களைத் தொடர்பு கொள்ளப்படும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, பான் அட்டை, வருமானச் சான்று, வங்கி பாஸ்புக் தவிர, விண்ணப்பதாரர் செல்லுபடியாகும் மொபைல் எண் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களை கட்டாயம் வழங்க வேண்டும்.