fbpx

அரசு கஜானா கொள்ளையடிக்கப்படுகின்றது…..கேரளாவின் ஆளுனர் ஆரிப் முகமது கான் பரபரப்பு பேட்டி….. முக்கிய ஆவணங்கள் நாளை வெளியிடப்படும்…

அரசு கஜானா கொள்ளையடிக்கப்படுவதாக கேரள ஆளுநர் புகார் எழுப்பும் நிலையில் நாளை இதற்கான ஆவணங்கள் வெளியிடப்படும என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்…

கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் மலையாளம் துறை இணை பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரியா வர்கீஸ் என்பவரும் உள்ளார். அவர் முதல்வர் பினராயி விஜயனின் தனி செயலாளர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி. தேர்வு நடந்தபோது பிரியா வர்கீஸ் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்துள்ளது. இருப்பினும் தரவரிசைப் பட்டியலில் அவர் முன்னிலைக்கு வந்தார். ஜோசப் ஸ்கேரியா என்பவர் தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்தார். 651 மதிப்பெண்கள் பெற்றவர் இரண்டாம் இடத்திலும் 156 மதிப்பெண்கள் பிடித்தவர் முதல் இடத்திலும் உள்ளார் என குற்றம்சாட்டப்படுகின்றது.

பல்கலை வேந்தரான கேரள கவர்னர் ஆரீப் முகமது கான் ஆகஸ்ட் மாதம் இந்த நியமனத்திற்கு தடை கேட்டார். குடும்ப உறவு முறைகளுக்கு பதவி வழங்கும் அதிகார முறைகேடு நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

எனவே பல்கலைக்கழத்தின் சார்பில் கேரளாவின் உயர்நீதிமன்றத்தில் தொடப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பிரியா வர்கீஸ் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இன்று அவர் இது குறித்து கூறுகையில் அமைச்சர்களின் தனி உதவியாளர்கள் பென்சன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கொள்ளைதானே… ஆயுள் முழுவதும் பென்சன் பெறும் திட்டம் இவர்களுக்கு மட்டும் எப்படி என கேட்டுள்ளார். அரசு கஜானா கொள்ளையடிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது. இதற்கான ஆவணங்கள் , சான்றுகள் அனைத்தையும் நாளை ஊடகங்களுக்கு வெளியிடுகின்றேன். என்று பரபரப்பாக கூறியுள்ளார்.

கேரள முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே இது போன்ற மோதல்கள் அடிக்கடி எழுகின்றது. இருப்பினும் தற்போது எழுந்துள்ள புதிய விஷயங்கள் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி..!! தீர்மானம் நிறைவேற்றம்..!!

Sun Sep 18 , 2022
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் […]
நடைபயணத்தை பாதியில் நிறுத்தும் ராகுல் காந்தி..? நாளை மறுநாள் டெல்லி பயணம்..?

You May Like