மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்..
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டி உள்ளார்… இந்த அறிவிப்பு குறித்து, இணை வேந்தர் என்ற முறையில் உயர்கல்வித்துறை அமைச்சரான தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டி உள்ளார்.. மேலும் கௌரவ விருந்தினர் என்று தன்னை அழைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.. இது தவறான செயல் என்றும், ஆளுநரின் செயல்பாடு பாஜகவின் பிரச்சாரம் போல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலை புகுத்துகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.. மேலும் இந்திய நாட்டின் வரலாற்றை கொஞ்சமாவது ஆளுநர் படிக்க வேண்டும் என்று கூறியுள்ள அமைச்சர், ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதால் ஒன்றிய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்..
ஆளுநர் எந்த ‘-ism’ பின்பற்றுவேராக இருந்தாலும் ‘Humanism’ என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும் என்றும், கௌரவ விருந்தினர் என்ற அடிப்படையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டதின் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.. எனவே தான் இணை வேந்தர் என்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாகவும், அதில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்தார்..