fbpx

ஓபிஎஸ்-க்கு விரைவில் ஆளுநர் பதவி..? உதயநிதி பேச்சால் பரபரப்பு..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதாக ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது..

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில், திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்..

அப்போது பேசிய அவர் “ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் அன்பை பெற்றவர்.. அமைச்சரான பிறகு நான் முதன்முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன்..

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், இருவரும் அவர்களுடைய பிரச்சனைக்கு பிரதமர் மோடியை சந்திக்க சென்றார்கள்.. ஆனால் மக்கள் பிரச்சனைக்காக அவர் மோடியை சந்தித்ததில்லை.. இப்போ மாறி மாறி இருவரும் கமலாலயம் போகிறார்கள்.. பாஜக என்றால் கவர்னர் டிரெயினிங் செண்டர் என்று பொருள்.. தமிழகத்தில் இருந்து பாஜக தலைவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஆளுநராக்கி விடுகின்றனர்.. தமிழிசை, இல.கணேசன், சி.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர்களாகிவிட்டனர்.. அந்த வகையில் ஓபிஎஸ்ஸும் இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் ஆவார்.. அது போல் தமிழக பாஜக தலைவராக பழனிசாமி ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..” என்று விமர்சித்திருந்தார்..

இந்நிலையில் ஓபிஎஸ் மகனும், தேனி எம்.பியுமான ஓ.பி ரவீந்திரநாத் உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ ஓபிஎஸ் எப்படி ஒரு மாநில ஆளுநராக முடியும்.. ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும்.. தேர்தல் நேரத்தில் எதையாவது பேச வேண்டும் என்று உதயநிதி பேசி உள்ளார்..” என்று தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

நாம் தமிழர் வேட்பாளருக்கு புதிய சிக்கல்... 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க தேர்தல் அலுவலர் நோட்டீஸ்..

Wed Feb 22 , 2023
அருந்ததியர்கள் குறித்து சீமான் பேசியது தொடர்பாக நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. வாக்குப்பதிவுக்கு இன்னும் […]

You May Like