fbpx

ஆளுநரை அவமதித்த விழா குழுவினர்….! ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு ரத்தானது வருகை….?

புதுக்கோட்டையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட அமைச்சர்கள் எஸ் ரகுபதி மெய்யநாதன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் டாக்டர் ஜெய் ராஜமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம் எம் அப்துல்லா ஆகியோரின் பெயர்களும் வெவ்வேறு தினங்களில் நிகழ்ச்சிகளில் போடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் ஆளுநர் ஆர்.என் ரவியின் பெயர் இடம் பெற்று இருந்ததை திமுக வெளியிட்ட கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கடுமையாக இது பற்றி விமர்சனம் செய்திருந்தனர் மேலும் போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வந்ததாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில்தான் ஆளுநரின் பெயரை நீக்கிவிட்டு புதிய அழைப்பிதழ் தயாரித்து தற்சமயம் வெளியிட்டு இருக்கிறது விழா குழு. இந்த சூழ்நிலையில், கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சிக்கான ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் இதுவரையில் ஆளுநர் தரப்பிலிருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

சென்ற வருடம் நடைபெற்ற 47-வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

கோவை மக்களே ரெடியா…..? முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வெளியான முக்கிய செய்தி….!

Wed Jul 5 , 2023
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வெற்றி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதில் பல திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் திட்டங்கள் பொது மக்களிடையே […]
போதை பொருள் குற்றங்கள் அதிகரிப்பு..! பிள்ளைகளிடம் பெற்றோர்கள் அன்போடு பேசுங்கள்..! - முதல்வர் முக.ஸ்டாலின்

You May Like