fbpx

’ஆளுநர் பதவியே அகற்றப்பட வேண்டிய பதவி’..!! ’அடங்கி செயல்படுங்கள்’..!! முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம். தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது.

மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை. அதைவிடுத்து, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்டமன்றத்திற்கு எதிரானதாகவும், இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளது.

மத்திய அரசுடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு நிதியைப் பெற்று தரலாம். ஆளுநர் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படலாம். ஆனால், மாநில அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தினந்தோறும் யாரைவாது கூட்டிவைத்துக்கொண்டு ஆளுநர் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும், ஆனால், தவறான பாடங்களை எடுக்கிறார். விழாக்களுக்கு செல்லட்டும், விதண்டாவாதம் பேசுகிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விமர்சிப்பது சரியல்ல.

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு ஆளுநர் அடங்கி செயல்பட வேண்டும். அவர் தனது பொறுப்பை உணர்ந்து அடங்கி இருப்பதே நலம். கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டதால் தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற கதவுகளை தட்ட நேர்ந்தது. அரசின் வாதங்களை கேட்டு உச்சநீதிமன்றம் பதில் அளித்திருப்பது தமிழக அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்ததும், ஆளுநர்கள் கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சிலவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதுமாக இருக்கிறார்கள். அதனால் மீண்டும் அந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்’’ என்றார்.

Chella

Next Post

குளிர்பானத்தில் சயனைடு..!! குழந்தை வரம் வேண்டி கோயில் பூசாரியை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!

Sat Nov 18 , 2023
சேலம் மாவட்டம் சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதாகும் பசவராஜ் என்பவருடைய மனைவி செல்வி. இவருக்கு 28 வயது ஆகிறது. பசவராஜ் பெங்களூருவில் தங்கி கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. ஆனால், இதுவரை குழந்தைகள் இல்லை. குழந்தை பேறுக்காக கடந்த ஓராண்டாக செல்வி பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் பரிகாரம் செய்து வந்துள்ளார். ஆனால், கடந்த 15ஆம் தேதி காலை […]

You May Like