ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளத
ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தினசரி சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தற்போது கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வார ஓய்வும் எடுக்கக்கூடாது. அதையும் மீறி எடுத்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அனைத்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் தவறாமல் பணிக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு வார விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் வழங்க இயலாது. மேலும், பணிக்கு வராதவர்களுக்கு ஆப்ஷன் ரிப்போர்ட் அனுப்பி சட்டப்பிரிவின் மூலம் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.