fbpx

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்வா..? அமைச்சர் சிவசங்கர் சொன்ன பரபரப்பு தகவல்..!!

பெரம்பலூர் தனியார் பல்கலைக் கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தனியார் ஆம்னி பேருந்துகளில் உள்ளதைபோல கைப்பேசிகளுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி மற்றும் படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

நாட்டிலேயே சுமாா் 20,000 பேருந்துகள் உள்ள மிகப்பெரிய போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமாகும். தற்போது, புதிதாக 600-க்கும் மேற்பட்டோர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். புதிதாக 7,500 பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 685 பேரை பணியமா்த்தியுள்ளோம்

மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தை கிண்டல் செய்வதை விடுத்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். பேருந்துக் கட்டணம் உயா்வு என்பது தற்போது கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயா்த்தாமலேயே போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

Read More : செக்…! இனி பானிபூரி & தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம்…!

English Summary

Transport Minister Sivashankar said in a press conference that there will be no hike in government bus fares.

Chella

Next Post

ரூ.279-க்கு ரீசார்ஜ் பண்ணுங்க..!! இத்தனை சலுகைகளா..? புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல் நிறுவனம்..!!

Fri Jul 12 , 2024
Airtel has launched a new prepaid plan aimed at customers looking for an affordable recharge option.

You May Like