மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஒய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வழித் தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஒய்வூதியம் ரூ 9,000இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்களுக்கு 1.07.22 முதல் அகவிலைப்படி 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947 கோடி கூடுதலாக செலவாகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும். எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள். ன்னையில் விடுதலை நாள் அரங்காட்சியகம் அமைக்கப்படும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுகக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும். அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனி ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். காசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும்”. இவ்வாறு அவர் பேசினார்.