fbpx

அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! ஊதிய உயர்வு..!! வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

கடந்த 2013ஆம் ஆண்டு 7-வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அது 2016இல் அமலுக்கு வந்தது. எப்போதுமே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்படுவது வழக்கம் என்பதால், 8-வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தவாறே இருந்தது.

ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது, 8-வது ஊதியக் குழுவை உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு சொன்னது. 8-வது மத்திய ஊதியக்குழுவை 2026 ஜனவரி 1ஆம் தேதி அமல்படுத்தும் வகையில், உரிய நேரத்தில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய அரசு முன்மொழிகிறதா என்று நிதித்துறை செயலாளர் டி.வி. சோம்நாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இப்போதைக்கு 8-வது ஊதியக்கமிஷன் அமைப்பது பற்றிய எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறியிருந்தார். மத்திய அரசு தரப்பில் இவ்வாறு சொல்லப்பட்டாலும், அரசின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம் என்கின்றனர்.

காரணம், ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில், சம்பள திருத்தம் ஏற்பட வேண்டுமானால், சம்பள கமிஷனை உருவாக்க வேண்டியது அடிப்படையான விஷயமாகும். அதுமட்டுமின்றி, கடந்த 2013 எம்பி தேர்தலுக்கு முன்பு, 7-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அதுபோலவே, அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அதனால், இந்த தேர்தலையும் கணக்கிட்டு 8-வது ஊதியக்குழு அமைத்தால், அது சாதகமான பலன்களை பெற்றுத்தரும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதமாக விலைப்படி உயர்வு தரப்பட்டது. இதையடுத்து, அரசு ஊழியர்கள் 46 சதவீதம் அகவிலைபடியாக பெற்று வருகின்றனர். இந்நிலையில், 8-வது ஊதிய குழு அமைக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுத்தேர்தலுக்கு முன்பே இதுகுறித்த அறிவிப்பு வரக்கூடும் என்று ஊழியர் சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. 7-வது ஊதியக்குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்குமான அகவிலைப்படியானது, 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட விகிதம் 2023 ஜூலை 1 முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பதி ராயுடு..!! மக்களவை தேர்தலில் போட்டி..?

Fri Dec 29 , 2023
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அம்பதி ராயுடு ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸில் இணைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 2013 – 2019 வரை விளையாடியவர் அம்பதி ராயுடு. இவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2010 – 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்த அம்பத்தி ராயுடு, […]

You May Like