fbpx

தேர்வே இல்லாமல் அரசு வேலை- அஞ்சல்துறையில் 12,828 காலியிடங்கள்!!

10ம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வே இல்லாமல் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் 12,828 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு: 18-40

பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

கல்வி தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். 10ம் வகுப்பில் உள்ளூர் மொழியை 10ம் வகுப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 

மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.

காலியிடங்கள்: 12,828

சம்பளம்:

கிளை போஸ்ட் மாஸ்டர்- ரூ.12,000

உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர்- ரூ.10,000

விண்ணப்பிக்கும் முறை-

விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக் கட்டணம்: பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

Rupa

Next Post

ஒடிசா ரயில் விபத்து…..! சேதமடையாத பெட்டிகளுடன் புறப்பட்டது ஹௌரா அதிவிரைவு…..!

Sat Jun 3 , 2023
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளான பகுதியில் இருந்து சேதம் அடையாத பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரு ஹவுரா அதிதிரை ஒரு ரயில் புறப்பட்டு ஹவுரா சென்றடைந்தது. பெங்களூரு ஹவுரா அதிவிரைவு ரயிலின் முன்பதிவு பெட்டிகளுக்கு எந்த விதமான சேதமும் உண்டாகவில்லை எனவும் அதன் காரணமாக, அந்த பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பியராகவும் ரயில்வே சார்பாக […]

You May Like