fbpx

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியா..? சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார் .

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து, பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞர்களை 100% ஆட்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021 டிசம்பர் 1ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியா..? சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது. அதனால், டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று நிறைவேற்றினார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

Chella

Next Post

அஜித், விஜய் மீது வழக்குப்பதிவு..? படம் பார்க்க சென்ற மாணவன் பலியான விவகாரத்தில் நடவடிக்கை..!!

Fri Jan 13 , 2023
துணிவு திரைப்படம் பார்க்க சென்று மாணவர் பலியான சம்பவத்தில் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படத்தை பார்க்க வந்த 19 வயதான பரத்குமார் என்ற அஜித் ரசிகர், ஓடும் லாரியின் மீது […]
அஜித், விஜய் மீது வழக்குபதிவு..? படம் பார்க்க சென்ற மாணவன் பலியான விவகாரத்தில் நடவடிக்கை..!!

You May Like